உள்ளடக்கத்துக்குச் செல்

தட்சிணேசுவர் நாத் மகாதேவ் மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்சிணேசுவர் நாத் மகாதேவ் மந்திர் (Dakshineswar Nath Mahadev Mandir) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழமையான கோயிலாகும். மதுபானி மாவட்டத்தில் மத்வாபூர் தொகுதியில் உள்ள உத்ரா கிராமத்தில் உள்ள மிதிலா பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சத்ய யுகத்தில் பண்டைய வேத மன்னர் தட்ச பிரசாபதி கடவுளை வழிபடுவதற்காக இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.[1] [2]

வரலாறு

[தொகு]

இந்த சிவன் கோவிலில், நீரபிசேகத்திற்குப் பின்னர் சிவலிங்கத்தின் மீது நெல் மற்றும் அரிசி மாவு ரொட்டியை சமர்பிப்பது வழக்கம். சன்யாசி பகத் கிரியின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் அவருக்கு முன் அவரது 8 ஆவது தலைமுறை குலங்களிலிருந்து நடைமுறையில் உள்ளது. கிசோரி கிரி, ராமச்சந்திர கிரி, சம்பு கிரி, பில்டு கிரி, சரோச் கிரி, சஞ்சய் கிரி மற்றும் பலர் அவர்களில் சிலராவர். கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தியுடன் அரிசி மற்றும் அரிசி மாவு ரொட்டியை வழங்கும் பக்தர்களுக்கு, அவரது சந்ததியினருக்கு ஒருபோதும் பணம், உணவு, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பற்றாக்குறை இருக்காது என்று நம்பப்படுகிறது. மேலும் பிராந்தியம் முழுவதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பராமரிக்கிறது என்றும் நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அப்பகுதி மக்கள் பெக்வாடா அருகே உள்ள தௌசு ஆற்றில் இருந்து புனித நீரை நிரப்பி, கோயிலின் சிவலிங்கத்திற்கு நீரபிசேகம் செய்கின்றனர். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழா இங்கு மிகவும் பிரபலமானது. இதேபோல சிவபெருமானின் நரக் நிவாரண சதுர்தசி விழாவிற்கும் இக்கோயில் மிகவும் பிரபலமானது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahashivratri today: The Shivalayas in the block area including the headquarters is ready, Jalabhishek will be done today". 
  2. "झूमते-गाते शिवालयों को पहुंचे कांवरिए". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-25.
  3. "दक्षिणेश्वर नाथ महादेव उतरा में श्रद्धालुओं की भीड़". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-25.